rss
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites

Saturday, February 6, 2010

வருகிறது புதிதாய்....

Saturday, September 19, 2009

நோன்பு காலம்
4:18    கீ கீ கீ அலரம் கூவல்
“...பா... எழுந்திரு! நோன்பு வைக்க நேரமாகுது..!’’
கணக்கின்றிப்போன அம்மாவின் அழைப்பு கூவல்
அலுப்புடன் எழுந்து அர்த்தம் தேடும்
நோன்பு கால கருங்காலை பொழுது

சூரியன் இன்னும் எழவில்லை
சூரிய கதிர்களாய் வாழ்வின் நற்பண்புகள் மீது
வெளிச்சமூட்டும் இந்த நோன்பு காலம்

வெறும் கடமைக்காக
நோன்பு வைக்க விரும்பது எந்த பக்குவப்பட்ட மனமும்
படைத்த இறைவனின்
படைப்பின் பலன்களை பெறுவதற்கும்
இறைவனோடு இன்னும் நெருங்க
இறைவன் அமைத்த பாதைத்தான்
இந்த நோன்பு காலம்

பொற்காலம்  குடியிருக்கும் குடும்பத்தில்
குடும்பமாய் அமர்ந்து
நோன்பு வைக்க உனவு உண்பது ஒர் குதுக்கலம்
உறவுகளின் பிணைப்புகளை இன்னும் பலப்படுத்தும்
இந்த நோன்பு காலம்

வளர்பிறையாய் ஈமானை வளர்க்கும்
இந்த நோன்பு காலம்
இறைவனை மண்டியிட்டு தொழும் பொழுது
என் பார்ம் இறங்குவதாகவும்
இறைவனிடம் கையேந்தி இறைஞ்சுதல் போது
இறைவன் மேன் மேலும் என்னை அருளச்செய்கிறான்
என் இன்னும் உண்மையாக உணர்கிறேன்

அன்னல் நபி (ஸல்) மொழிந்ததுப்போல்
நோன்பு மனித மாண்பு காக்கும் கேடயம்
வேளையிடத்தில் ஆயிரத்தெட்டு பிரச்சனைகளிருந்தாலும்
அமைதியால் வேலையில் செயல்படுகிறேன்
ஆத்திரம் வந்தாலும் அடக்கிகொள்கிறேன்
இந்நற்குணங்களை நோன்பு வைத்தவர்களிடமும்
பிரகாசிக்க நானும் பார்க்கிறேன்

ஆசையும் இச்சையும்
நீயும் நானும் எளிதில் கேட்குப்போக உதவும்
நோன்பின் அர்த்தமறிந்தால்
நீயும் நானும் ஆசை இச்சை தவிர்த்து
உலக ஞானம் வளர்ப்போம்

தண்னீர் பல்லில் படாமல்
பசி வந்து வயிற்றைக் கிள்ளினாலும்
இறை நம்பிக்கை கற்றுக்கொடுக்கும்
தாங்கிகொள்ளும் பண்பு

எழை எளியோன்
பசி பட்டினி
அவற்றைப் பற்றி ஆழமாய் யோசிக்கும் அறிவு கூர்மை
ஈகை செய்யும் குணங்களை நோன்பு வளர்த்துவிடும்

பாகுபட்டால் உலகம் பிரிந்திருக்கு
பாவப்பட்டவன் என்ன செய்வான்?
சமதுவத்தை எப்படி பரப்புவது?
இவைகளுக்கு விடையளிக்கவே
இஸ்லாம் விரிந்து வருகிறது உலகெங்கும்

ஒருவனே இறைவன், அவனை மட்டும் வணங்குவோம்
ஒருவனே இறை தூதுவன், நபி முஹம்மது (ஸல்) வழிப்படி நடப்போம்
ஒருமையை பின்பற்றி மனித ஒற்றுமை வளர்கிறது இஸ்லாம்
வருட வருடமாய் வரும் ஒரு மாத நோன்பு காலம்
பல மடங்கு மனித ஒற்றுமையை புதுப்பிக்கிறது
சமுதாய நல்லிணக்கமாய்

பற்பல நன்மைகளை போதிக்கும் இந்த நோன்பு காலம்
மறுமையில் இறைவன் பாவப்பட்ட நம்மை மன்னிக்கவே
ஆயத்தப்படுத்தும் இந்த நோன்பு காலம்
இறையச்சத்தோடு இறைவனை தொழுவோம் எத்திருநாளும்
இஸ்லாம் வழிப்படி வாழ்வோம் வாழ்நாளும்
சொர்க்க வாசல் நம் வழியே திறந்திருக்கும்

Thursday, April 9, 2009

கவலையில்லாமல் காலம் கடந்துப்போகுது. நானும் அப்பக்கம் நடந்துப்போகிறேன் சில கவலைகளுடன். கவலைகள் இல்லாத மனிதர் இங்கு யாருயில்லை! எந்த வலைகளில் சிக்கினாலும், அதை பிய்த்துக்கொண்டு வந்ததை மனித வரலாறு கதைகள் நமக்கு கூறியதல்லவா!

பிற்ப்பிலே எத்தனை 'வீரர்களை 'சாய்த்து வந்தவனே, நீ தலைச் சாயலாமா?
இரு கைகள் இறைவன் உனக்கு கொடுத்தான் , நல்ல யுத்தத்தில் நீ வெல்லவே!

Friday, February 6, 2009


via ffffound.com

Panivizhum malarvanam un paarvai oru varam
inivarum munivarum thadumaarum kanimaram

(panivizhum)

saelai moodum ilanjoalai maalai soodum malarmaalai
irubadhu nilavugal nagamengum olividum
hey hey ilamaiyin kanavugal vizhiyoaram thulirvidum
kaigal idaithanil neligaiyil idaiveli kuraigaiyil
eriyum vilakku siriththu kangal moodum
http://www.free-lyrics.org

(panivizhum)

kaaman koayil siraivaasam kaalai ezhundhaal ha haa parigaasam
thazhuvidum pozhudhilae idam maarum idhayamae
hey hey viyarviyin mazhailae payiraagum paruvamae
aadum idaigalil vazhigira nilavoli iruvizhi
mazhaiyil nanaindhu magizhum vaanambaadi

(panivizhum)

Monday, February 2, 2009via ffffound.com


Sunday, February 1, 2009

என்ன தப்புயிருக்கு?!கணக்கர் வேளைப்பார்க்கும்
கணக்கரே
தப்புக்கணக்கு போடும்போது

புறம்பேசக்கூடாதென சொல்லி
புறம் பேசிவதில்
என்ன தப்புயிருக்கு?!

Saturday, January 31, 2009

இரவின் நிழல்

இரவின் நிழல் இம்மாத கவிமாலையின் கவிதை தலைப்பு. அதைப்பற்றி எழுத அவ்வளவாக எனக்கு ஆர்வம் வரவில்லை. நான் நல்ல கவிதை எழுதி ரொம்ப மாதங்களாகிவிட்டன. அரைத்த மாவை திருப்பி அரைக்க மனசு விருப்பமில்லை. எழுதுனும் எழுதி குப்பையாக ஒரு கவிதை எழுதி என்னை திருப்பதிபடுத்திக்கொள்ள விரும்பவில்லை. அதனால் நான் கவிதை எழுதுவதை நிறுத்திக்கொண்டு, மனம் நிறைய வாசிக்க தொடங்கிவிட்டேன்.
இருந்தும் அவ்வப்போது கவிதை எழுத தோனும் அல்ல தானாக என் முன்னால் கவிதை வந்து விரிவும் அவையே இங்கு இதுவரை பதிவு செய்து வந்தேன். மூன்று கவிதைகளாகயிருந்தாலும் அதில் ஒரு திருப்தி எனக்கிருந்தது.

திருப்தியான கவிதைகளை எழுதமுடிவில்லையேன ஒரு ஏக்கமிருந்தாலும், இரவின் நிழல் அதற்கு கொஞ்சம் திணிப்போட்டது. அதன் ஆழமான படிமங்களை யதார்தமாக கொணரமுடியாமல் தவித்தேன். பொரிதும் யோசிக்கவும் முடியாமல் பெரும் சவலாகத்தான் அமைந்தது இரவின் நிழல் எனும் தலைப்பு.

இரவை நிழலாய் காட்சி தரும் தருணங்களை படம்பிடித்தேன். அக்காட்சிகளைக் கோர்வையாக எழுதமுடியாமல் துண்டு துண்டாய் எழுதி ஒட்டு போட்டதுப்போல் அமைந்தது எனது இரவின் நிழல்.

படித்து, இக்கவிதையை மேலும் சிறப்பாக எழுத ஆலோசனை நீங்கள் கூறலாமே!

வானம் சாயாமல்
புள்ளி புள்ளியாய்
பங்கு சந்தை சரிவதுப்போல்
சூரியன் மதன மாயத்தில் சரியும்

சரியாமல்
குவியும் ஆசை
விடுப்பட்ட வித்தையை விட்டுப்பிடிக்க
மான் வேடத்தில் புலியும்
புலி வேடத்தில் மானும்
இந்திர நட்சத்திரங்களாய்
மோதிக்கொள்ளும் நேரம்


இயந்திரமாய் உழைச்சு
இன்னும் கொஞ்சம் இயந்திரமாய்
வீட்டுக் கணினியில் தொலையும் இரவு

கூரை ஒட்டையில்
நிலா பார்க்க முடியாமல்
வரைப்பட புத்தகத்தில்
நிலா வரையும்
ஏழு வயது குமுதா

பதினெட்டை தாண்டி பத்தொன்பதை
எட்டிப்பார்க்கும் ஒரு நிலா
அதன் கைத்தொலைப்பேசியை
அடிக்கடி பார்ப்பதேன்?...

தேன் தேன் தேடி
பப்பிலும் மப்பிலும்
இரவு தீர்ந்து குடித்து
நிலவு தேடும் இளமை

அய்யோ...
வானத்திலிருந்து தடுக்கி
தண்ணீரில் விழுந்த நிலவைப்போல்
தள்ளாடும் அவரவர் தனிமை

எங்கேயோ நெருக்கடி வீடுகளில்
கையிருக்கும் வயிறுக்கும் போராட்டமாய்
பதம் பார்க்கும் வறுமை

நிழல்போல் ஒட்டாமல்
ஜோடியிழந்த முதுமை
இரவொடு ஒடிந்து போக விரும்பும்

கறுப்பான இரவு
வெளிச்சமாய் நிலவும் நட்சத்திரங்களும்
நிதர்சனமாய் ஒரு உண்மை
இரவின் முகப்போல்
நிழல்போல் ஒட்டாமல் போகும்
பலரின் வாழ்க்கை

Friday, January 30, 2009

சில‌ த‌க‌வ‌ல் # 1

காந்திக்கு "மகாத்மா" என்னும் பட்டம் அளித்தவர் தாகூர் என்பது பலருக்குத் தெரியாது. நோபெல் பரிசு பெற்ற தாகூருக்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் 1915 இல் நைட்கூட் (Knighthood) கௌரவம் அளித்தது. ஆனால் 1919 இல் ஜாலியன் வாலா பாக் தளத்தில் ஆயுதமற்றுப் போராட்டம் நடத்திய 400 மேற்பட்ட இந்திய சீக்கியரைப் பிரிட்டிஷ் படையினர் சுட்டுக் கொன்ற பிறகு தாகூர் அவர்கள் அளித்த கௌரவப் பட்டத்தைத் துறந்தார்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=80901291&format=html