4:18 கீ கீ கீ அலரம் கூவல்
“...பா... எழுந்திரு! நோன்பு வைக்க நேரமாகுது..!’’
கணக்கின்றிப்போன அம்மாவின் அழைப்பு கூவல்
அலுப்புடன் எழுந்து அர்த்தம் தேடும்
நோன்பு கால கருங்காலை பொழுது
சூரியன் இன்னும் எழவில்லை
சூரிய கதிர்களாய் வாழ்வின் நற்பண்புகள் மீது
வெளிச்சமூட்டும் இந்த நோன்பு காலம்
வெறும் கடமைக்காக
நோன்பு வைக்க விரும்பது எந்த பக்குவப்பட்ட மனமும்
படைத்த இறைவனின்
படைப்பின் பலன்களை பெறுவதற்கும்
இறைவனோடு இன்னும் நெருங்க
இறைவன் அமைத்த பாதைத்தான்
இந்த நோன்பு காலம்
பொற்காலம் குடியிருக்கும் குடும்பத்தில்
குடும்பமாய் அமர்ந்து
நோன்பு வைக்க உனவு உண்பது ஒர் குதுக்கலம்
உறவுகளின் பிணைப்புகளை இன்னும் பலப்படுத்தும்
இந்த நோன்பு காலம்
வளர்பிறையாய் ஈமானை வளர்க்கும்
இந்த நோன்பு காலம்
இறைவனை மண்டியிட்டு தொழும் பொழுது
என் பார்ம் இறங்குவதாகவும்
இறைவனிடம் கையேந்தி இறைஞ்சுதல் போது
இறைவன் மேன் மேலும் என்னை அருளச்செய்கிறான்
என் இன்னும் உண்மையாக உணர்கிறேன்
அன்னல் நபி (ஸல்) மொழிந்ததுப்போல்
நோன்பு மனித மாண்பு காக்கும் கேடயம்
வேளையிடத்தில் ஆயிரத்தெட்டு பிரச்சனைகளிருந்தாலும்
அமைதியால் வேலையில் செயல்படுகிறேன்
ஆத்திரம் வந்தாலும் அடக்கிகொள்கிறேன்
இந்நற்குணங்களை நோன்பு வைத்தவர்களிடமும்
பிரகாசிக்க நானும் பார்க்கிறேன்
ஆசையும் இச்சையும்
நீயும் நானும் எளிதில் கேட்குப்போக உதவும்
நோன்பின் அர்த்தமறிந்தால்
நீயும் நானும் ஆசை இச்சை தவிர்த்து
உலக ஞானம் வளர்ப்போம்
தண்னீர் பல்லில் படாமல்
பசி வந்து வயிற்றைக் கிள்ளினாலும்
இறை நம்பிக்கை கற்றுக்கொடுக்கும்
தாங்கிகொள்ளும் பண்பு
எழை எளியோன்
பசி பட்டினி
அவற்றைப் பற்றி ஆழமாய் யோசிக்கும் அறிவு கூர்மை
ஈகை செய்யும் குணங்களை நோன்பு வளர்த்துவிடும்
பாகுபட்டால் உலகம் பிரிந்திருக்கு
பாவப்பட்டவன் என்ன செய்வான்?
சமதுவத்தை எப்படி பரப்புவது?
இவைகளுக்கு விடையளிக்கவே
இஸ்லாம் விரிந்து வருகிறது உலகெங்கும்
ஒருவனே இறைவன், அவனை மட்டும் வணங்குவோம்
ஒருவனே இறை தூதுவன், நபி முஹம்மது (ஸல்) வழிப்படி நடப்போம்
ஒருமையை பின்பற்றி மனித ஒற்றுமை வளர்கிறது இஸ்லாம்
வருட வருடமாய் வரும் ஒரு மாத நோன்பு காலம்
பல மடங்கு மனித ஒற்றுமையை புதுப்பிக்கிறது
சமுதாய நல்லிணக்கமாய்
பற்பல நன்மைகளை போதிக்கும் இந்த நோன்பு காலம்
மறுமையில் இறைவன் பாவப்பட்ட நம்மை மன்னிக்கவே
ஆயத்தப்படுத்தும் இந்த நோன்பு காலம்
இறையச்சத்தோடு இறைவனை தொழுவோம் எத்திருநாளும்
இஸ்லாம் வழிப்படி வாழ்வோம் வாழ்நாளும்
சொர்க்க வாசல் நம் வழியே திறந்திருக்கும்
1 comment:
Just a font I found, actually! :)
Thanks for stopping by my blog,
~Jenn (Ex Hot Girl)
Post a Comment