இருந்தும் அவ்வப்போது கவிதை எழுத தோனும் அல்ல தானாக என் முன்னால் கவிதை வந்து விரிவும் அவையே இங்கு இதுவரை பதிவு செய்து வந்தேன். மூன்று கவிதைகளாகயிருந்தாலும் அதில் ஒரு திருப்தி எனக்கிருந்தது.
திருப்தியான கவிதைகளை எழுதமுடிவில்லையேன ஒரு ஏக்கமிருந்தாலும், இரவின் நிழல் அதற்கு கொஞ்சம் திணிப்போட்டது. அதன் ஆழமான படிமங்களை யதார்தமாக கொணரமுடியாமல் தவித்தேன். பொரிதும் யோசிக்கவும் முடியாமல் பெரும் சவலாகத்தான் அமைந்தது இரவின் நிழல் எனும் தலைப்பு.
இரவை நிழலாய் காட்சி தரும் தருணங்களை படம்பிடித்தேன். அக்காட்சிகளைக் கோர்வையாக எழுதமுடியாமல் துண்டு துண்டாய் எழுதி ஒட்டு போட்டதுப்போல் அமைந்தது எனது இரவின் நிழல்.
படித்து, இக்கவிதையை மேலும் சிறப்பாக எழுத ஆலோசனை நீங்கள் கூறலாமே!
புள்ளி புள்ளியாய்
பங்கு சந்தை சரிவதுப்போல்
சூரியன் மதன மாயத்தில் சரியும்
குவியும் ஆசை
விடுப்பட்ட வித்தையை விட்டுப்பிடிக்க
மான் வேடத்தில் புலியும்
புலி வேடத்தில் மானும்
இந்திர நட்சத்திரங்களாய்
மோதிக்கொள்ளும் நேரம்
இயந்திரமாய் உழைச்சு
இன்னும் கொஞ்சம் இயந்திரமாய்
வீட்டுக் கணினியில் தொலையும் இரவு
நிலா பார்க்க முடியாமல்
வரைப்பட புத்தகத்தில்
நிலா வரையும்
ஏழு வயது குமுதா
பதினெட்டை தாண்டி பத்தொன்பதை
எட்டிப்பார்க்கும் ஒரு நிலா
அதன் கைத்தொலைப்பேசியை
அடிக்கடி பார்ப்பதேன்?...
தேன் தேன் தேடி
பப்பிலும் மப்பிலும்
இரவு தீர்ந்து குடித்து
நிலவு தேடும் இளமை
வானத்திலிருந்து தடுக்கி
தண்ணீரில் விழுந்த நிலவைப்போல்
கையிருக்கும் வயிறுக்கும் போராட்டமாய்
பதம் பார்க்கும் வறுமை
நிழல்போல் ஒட்டாமல்
ஜோடியிழந்த முதுமை
இரவொடு ஒடிந்து போக விரும்பும்
வெளிச்சமாய் நிலவும் நட்சத்திரங்களும்
நிதர்சனமாய் ஒரு உண்மை
இரவின் முகப்போல்
நிழல்போல் ஒட்டாமல் போகும்
பலரின் வாழ்க்கை