மலர்கள் அற்ப ஆயுள் உடையவை என்று நாம் நினைக்கிறேம்.
அதற்காகப் பரிதாப்படுகிறேம்.
ஆனால், ஒரு வகையில் மலர்கள் நமக்கு பொறாமை ஏற்படுத்தும் படைப்புகள்.
அவை சில மணி நேரம்தான் வாழ்கின்றன
என்றாலும் சிரித்துக்கொண்டே வாழ்கின்றன.
இந்த தாத்துவத்தை நான் ஒப்பவில்லை.
கவிக்கோ அப்துல் ரகுமானின் இது சிறகுகளின் நேரம்! நூலில் 'முகத்திரை விலக்கல்' என்ற தொகுப்பில் எழுதிருப்பார் அதை நான் அப்ப்டியே இங்கு ஈ அடிச்சான் காப்பிபோல் அப்பி விட்டேன்.
இது சிறகுகளின் நேரம் கவிக்கோ அப்துல் ரகுமானின் இன்னொரு சிறந்த படைப்பு நான் மட்டுமில்லை நீங்களும் படித்துப்பார்த்தால் மனம் மகிழ்ந்து சொல்வீர்கள். அவ்வளவு யதார்தம் அவ்வளவு தத்துவம் அவ்வளவு உற்சாகம் நான் ஒவ்வொரு கட்டுரையும் படிக்க உணர்ந்தேன் பரவசமைடைந்தேன்.
கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைகளை விரும்பி படைப்போன் ஆனால் அவரின் கவிதைகள் எளிதில் எனக்கு புரியாது. இது சிறகுகளின் நேரத்தில் உள்ள கட்டுரைகள் அப்படியல்ல, கவிக்கோ அப்துல் ரகுமானின் எழுத்து எளிதாகுவும் இருந்தது மோலும் அவர் எழுத்து நடைமோல் கூட மோகமும் கூடியது.
இது சிறகுகளின் நேரத்தில் நான் அடைந்த உணர்வுகளை இன்னொரு பதிவில் பதிவு செய்வேன் அது வரைக்கு நீங்கள் நலம் தானா? உங்கம் உடலும் உள்ளமும் நலம் தானா? ...
No comments:
Post a Comment