Monday, January 12, 2009

கனவுகள் பூக்கின்ற செடிகள் 2009

ஆண்டு 2009 வந்துடுச்சு,
12 நாட்கள் தாம்தூம்னு ஒடிடுச்சு,
ஒரு நாள் கடந்து வரும் தைப்பொங்கல்,
மின்னுலகில் பரந்திருக்கும் தமிழர்களுக்கு
முன்கூட்டிய சொல்லுகிறேன் பொங்கல் வாழ்த்துக்கள்
நாளைக்கும் மறுநாளும் எனக்கு வேலை ஓய்வு,
இருந்தும் வீட்டில் பல வேலையிருக்கு,
கனவு சோலையில் ஓய்வுக்கு ஒதுங்கமுடியவில்லை
நித்தம் நிகழும் பொருளாதரம் தரமாகயிருப்பதில்லை;
"நாளையிலுருந்து இரவு வேலையில்லை,
அதனால் பகலுக்கு வேலை மாற்றம்."
அதன் மூலம் எனக்கும் பொருளாதரம் ஏமாற்றம்
என் வருங்காலத்தோடு பேசும்போது நிகழ்ந்தது
என்னையறியாமல் மனசில் ஒரு தடுமாற்றம்
மண்ணில் ஒளி மின்னுவதுபோல் மறுக்கணம்
என்னில் ஒரு உருமாற்றம்
கல்லோடு கல் உரசி தீப்பொறி
உள்ளத்தோடு உள்ளம் உரசும்போது
சின்ன சின்ன தீப்பொறிப்போல்
சின்ன சின்னத்தாய் மனம் பேசி
ஒரு வகை ஆறுதல், மன மாறுதல்,
புதிய ஒளியைக் கணவோடும்
" சத்யம், சத்யமென்ன??!
சத்யத்திற்க்கு சத்யம் ஒரு மோசடி!!!"
அதுப்போல நான் வேண்டாம்
உனக்கு நான் சத்யம்! இது சத்யம்!
உன்னிடம் சொல்லாமல்,
என்னிடம் நான் சொல்லிக்கொண்டேன்!"

No comments: